மதுரை | நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்; துடைப்பங்களை வீசி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!

கஞ்சா வைத்திருந்த வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்pt web
Published on

செய்தியாளர் மணிகண்டபிரபு

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக கோவை போலீசார் வந்தனர்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் face bo

அவர்களுக்கு உதவியாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் என்பவர் வந்துள்ளார். அவரை பெண் என்றும் பாராமல், சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளியதாகவும், சவுக்கு சங்கர் கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர்
திருத்தணி: திடீரென்று வந்த மூச்சுத்திணறல்.. கோவில் படி ஏறும்பொழுது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

இந்நிலையில், கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்டார். அங்கு சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாயில் முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் துடைப்பம் மற்றும் கண்டன பதாகைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், கையில் பெரிய கட்டுடன் காணப்பட்டார். தொடர்ந்து நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கர்
மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றார் மாயாவதி! பின்னணி என்ன?

அங்கு கஞ்சா வைத்திருந்த வழக்கில் மே 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார். “அப்போது கோவை சிறையில் என்னை தாக்கினார்கள். எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு ஏற்கனவே சில உடல்நலக்குறைவு உள்ளது. எனவே என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிபதி இது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. இதனை முறையாக கடிதம் மற்றும் மனுவாக தாக்கல் செய்து நிவாரணம் பெற அறிவுறுத்தினார்.

இதனையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கரை காவல்துறையினர்சூழ வாகனத்தில் அழைத்துச்சென்ற நிலையில், சவுக்கு சங்கர் சென்ற வாகனத்தின் மீது துடைப்பங்களை வீசி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி மாவட்ட நீதிமன்றம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சவுக்கு சங்கர்
உத்தரகாண்ட் | குப்பையை கொளுத்தப்போய் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ.. அழிவின் விளிம்பில் உயிர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com