தொடரும் போக்குவரத்து தடை: நெரிசலில் திணறும் திம்பம் மலைப்பாதை

தொடரும் போக்குவரத்து தடை: நெரிசலில் திணறும் திம்பம் மலைப்பாதை
தொடரும் போக்குவரத்து தடை:  நெரிசலில் திணறும் திம்பம் மலைப்பாதை
Published on

இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் இரண்டாவது நாளாக பண்ணாரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகன போக்குவரத்திற்கு மாவட்ட ஆட்சியர் விதித்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தியதால் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இரவு நேர வாகன போக்குவரத்து தடை அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக திண்டுக்கல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நகர முடியாமல் நின்றுள்ளன.

இதற்கிடையே வனத்துறையினர் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களின் தன்மைக்கேற்ப நுழைவு கட்டணம் வசூலித்து வருகின்றனர். இரவு நேர வாகன போக்குவரத்து தடையால் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டுனர்கள் உடனடியாக இதில் தமிழக அரசு தலையிட்டு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து இருபத்தி நான்கு மணி நேரமும் சாலையில் வாகனங்களை இயக்கும் வகையில் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com