சத்தியமங்கலம்: தாலாட்டை கேட்டபடி கரும்புக் காட்டு தொட்டிலில் கண்ணுறங்கும் குழந்தை

சத்தியமங்கலம்: தாலாட்டை கேட்டபடி கரும்புக் காட்டு தொட்டிலில் கண்ணுறங்கும் குழந்தை
சத்தியமங்கலம்: தாலாட்டை கேட்டபடி கரும்புக் காட்டு தொட்டிலில் கண்ணுறங்கும் குழந்தை
Published on

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குன்றி, மாக்கம்பாளையம், கோவிலுர் ஆகிய கிராமங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளன. இப்பதொழிலாளர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் குடும்பத்துடன் வேலை செய்வதால் பெரும்பாலான பெண்கள் கைக்குழந்தையுடன் கரும்பு வெட்டும் பணியை செய்கின்றனர்.
கரும்புக்காட்டில் குழந்தைகளை அருகிலேயே உட்கார வைத்து பெண்கள் தங்கள் வேலையை தொடருகின்றனர். குழந்தைகளும் கரும்பு காட்டிலேயே விளையாடி பொழுது போக்குகின்றனர். குழந்தைகளும் விளையாட்டாக கரும்பு வெட்டுகின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் உள்ளதால் குழந்தைகள் வெயிலில் காய்கின்றனர்.

குழந்தைகள் கரும்பு காட்டிலேயே தூங்கி விழும்போது பெண்கள், அங்கேயே கரும்புகளை முக்கோண வடிவேல் அமைத்து அதில் சேலையை தூரி ஆக்கி அதில் குழந்தையை படுக்க வைத்து தாலாட்டு பாடுகின்றனர். குழந்தை தூங்கிய பின், மீண்டும் கரும்பு வெட்டும் பணிக்கு செல்கின்றனர். அப்போது அருகில் மற்றொரு குழந்தையை பாதுகாப்புக்கு வைத்து கண்காணிக்கின்றனர்.

வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்திலேயே குழந்தைகளை வளர்க்கின்றனர். குளிரூட்டப்பட்ட அறையில் குழந்தைகளை சொகுசு தொட்டில் கட்டினால் கூட தூங்காத குழந்தைகள் இங்கு குறட்டை விட்டு தூங்கும் போது காண்போர் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com