“விஜய் வருகையால் நாதக-வுக்கு பாதிப்பில்லை... இரண்டு மடங்காக வாக்குகள் கூடும்” - சாட்டை துரைமுருகன்

தம்பி தம்பி என்று விஜய்யை கூறிய சீமான், தவெக முதல் மாநாட்டுக்குப் பின் விஜய் மீதே மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது ஏன் என்று விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்.
சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்புதிய தலைமுறை
Published on

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கிய காலத்திலிருந்தே விஜய்க்கு ஆதரவாக சீமான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்ல, தம்பி, தம்பி என்றே விஜய்யை அழைத்து வந்தார். எனவே 2026 நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் சீமான் - விஜய் கூட்டணி அமைவது உறுதி என பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய் தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் தொடர்பாக தனது கொள்கையை அறிவித்தார். மேலும் சீமான் தொடர்பாக விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து, ‘முதலில் தம்பி தம்பி என்று விஜய்யை கூறிப்பிட்ட சீமானே, இப்போது விஜய் மீது, மிக கடும் விமர்சனங்களை முன்வைப்பது ஏன்?’ என்ற கேள்வி எழுந்தது. அதுபற்றி நமக்கு விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்.

சீமான் with விஜய்... சீமான் vs விஜயாக மாறியது?

“சீமான் with விஜய் என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால், சீமான் vs விஜய் என்று மாறிவிட்டது... காரணம் கொள்கை முரண், சித்தாந்த முரண், தத்துவ முரண்.

தமிழ் தேசதியத்திற்கு எதிராக யார் வந்தாலும், அதுவும் திராவிடத்தை முன்னிறுத்தி வந்தால், அவர்களை நாங்கள் விமர்சனம் செய்வோம். கருத்தியல் ரீதியாக மோதுவோம்.

சர்கார், மெர்சல் படங்கள் தொடங்கி தவெக கொடி வரை விஜய் சர்ச்சையில் சிக்கிய போதெல்லாம், அண்ணன் சீமான் விஜய்க்கு ஆதரவாக இருந்திருக்கிறார். அதற்கு விஜய் நன்றிகூட தெரிவித்ததில்லை.

அப்படியிருந்தும் அவரை சீமான் அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. அப்படியிருந்தவர், இப்போது ஏன் எதிர்க்கிறார் என்றால், ‘தமிழ் தேசியமும், திராவிடமும் இரண்டு கண்கள்’ என்று தெரிவித்துள்ளார் விஜய். இதன்மூலம் தான் மட்டும் குழப்பமாகாமல், லட்சக்கணக்கான இளைஞர்களையும் குழப்பத்தில் கொண்டு சென்றிருக்கிறார் விஜய்.

15 ஆண்டு காலமாக திராவிடம் வேறு; தமிழ் தேசியம் வேறு என்று இளைஞர்கள் மத்தியில் சீமான் அண்ணன் தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். திராவிடம் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்கிறது. தமிழ் தேசியம் ஈழத்தமிழருக்கு ஆதரவளிக்கிறது.

“சினிமாவில் அட்லி படம் போல...”

கருத்தியலாக மக்களை தயார்படுத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மை நோக்கம்.

திமுக - அதிமுக என்னும் திராவிட கட்சிகள், பாஜக - காங்கிரஸ் என்ற தேசிய கட்சிகள் எப்படியெல்லாம் தமிழர்களை ஆண்டார்கள் என்று அடுத்த தலைமுறையிடம் தெரிவித்து அவர்களை தயார் படுத்தி வருகிறோம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

இந்த சமயத்தில் தனக்கென ஒரு கொள்ளையே கொண்டிருக்காத ஒரு நடிகர், அந்த இளைஞர்களை மட்டுப்படுத்திவிடக் கூடாது.. சினிமாவில் அட்லி படத்தில் பல படங்களில் இருந்து கதைகளை எடுத்து ஒன்றை உருவாக்குவதுப்போல, ஒரு கொள்கையை உருவாக்கி உள்ளார். அது எப்படி சரியானதாக இருக்கும்? வரும் போதே குழப்பத்துடன் வருகிறார். ஒருபுறம் சனாதானம் என்று பேசுகிறார். மற்றொரு புறம் பகவத்கீதையை கையில் வாங்குகிறார். பெரியாரிடமிருந்து கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

விஜய் ஒரு director artist

ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்துள்ளார் என்றால் அதை பார்ப்பதற்கு கூட்டம் வரதான் செய்யும். ஆனால், கூடிய கூட்டத்தை கண்டெல்லாம், ஒரு கட்சியின் தலைவர் பயப்பட முடியாது. விஜயேவும் அரசியலில் தனக்கு உத்தரவாதமில்லை என்று கருதுகிறார்.

இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில விஷயங்களை பார்த்து வாசிப்பார்தான். ஆனால் அவர்கூட தனது கொள்கையை பார்த்து வாசித்தது இல்லை. ஸ்டாலின் துண்டு சீட்டு என்றால், விஜய் ஏ4 சீட்..

36 லட்சம் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியின் வாக்காளர்கள் யாருக்கும் விலை போகவில்லை. இது 2026 தேர்தலில் இரட்டை மடங்காகத்தான் மாறும்.

85% நாம் தமிழர் கொள்கையை விஜய் எடுத்துவிட்டார். கொள்ளை என secular social justice என்கிறார். தமிழர் ஒருவரை வெளியுறவுத்துறை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்கிறார். இதுதான் ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வா?

சாட்டை துரைமுருகன்
ஒரே நிகழ்ச்சியில் விசிக திருமாவளவன் மற்றும் தவெக விஜய்? - வெளியான தகவலுக்கு விளக்கமளித்த திருமா!

விஜய்க்கு எழுதிக் கொடுத்தவர்கள் தவறு தவறாக எழுதிக்கொடுத்துள்ளனர். விஜய் ஒரு director artist. இயக்குநர் சொல்வதை அழகாக நடிப்பார். அட்லி இயக்கினால் நன்றாக நடிப்பார்.. வேறு ஒருத்தர் இயக்கினால் தவறாக நடிப்பார்.. இங்கே இயக்குநர்தான் பிரச்னை..” என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனின் முழுமையான பேட்டியை இங்கே காணலாம்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com