ராகுல்காந்தியை தம்பி என நடிகர் சத்யராஜ் அழைத்துள்ளார். மேலும், அண்ணா ஸ்டாலின் எனவும், தம்பி ராகுல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, 'உங்களில் ஒருவன்' புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், ''நான் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். என்னுடைய ஆங்கிலம் சற்று மோசமானதாக இருக்கும். காரணம், தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள். ஒரு சிங்கத்தைப்போல அவர் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
பெரியார், சமூக நீதி, காரல் மார்க்ஸை படித்தவர்கள் சிறந்த மனிதர்களாக இருக்க முடியும். நம் மனிதர்களாக இருக்க வேண்டுமென்றால் முதலில் மனிதநேயம் நமக்குள் இருக்க வேண்டும். பெரியாரின் சமூக நீதியையும், காரல் மாக்சின் பொருளாதார கொள்கைகளையும் படித்தால் மட்டுமே நம்மால் அப்படி இருக்க முடியும்.
திமுகவில் எல்லாரும் அண்ணாவின் தம்பி என அழைத்துக்கொள்வார்கள். அப்படி நான் உங்களை எனது தம்பி என அழைக்கிறேன். அண்ணா ஸ்டாலின், தம்பி ராகுல்'' என்றார்.
மேலும், உங்களில் ஒருவர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கலகலப்பாக பேசினார் சத்யராஜ்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F356218433003966%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>