“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி

“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி
“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி
Published on

மதுரை மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மதுரை அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக "வெல்வோம்" என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். அப்போது பேசிய நடிகர் சசிக்குமார், “நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து முதல்முறையாக காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோ. காவல் துறை தான் ரியல் ஹீரோ. எந்தப் பிரச்சனை வந்தாலும் காவல்துறை செயலியை பயன்படுத்துங்கள். சிசிடிவி கேமரா இருப்பது சாட்சி சொல்வதற்கு சமம். நாம் சாட்சி சொல்ல பயப்பட்டாலும் சிசிடிவி யாருக்கும் பயப்படாது. நாம் பயந்தாலும் சிசிடிவி கேமராக்கள் யாருக்கும் பயப்படாது” எனப் பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “ஏழரை கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் காவலர்கள் மட்டுமே உள்ளனர். எல்லாவற்றுக்குமே காவலர்கள் வர வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும். இளைஞர்கள் எதை எதையோ பதிவிறக்கம் செய்வதை விடுத்து காவல்துறை செயலிகளை தங்கள் செல்போனில் (Sos app) பதிவிறக்கம் செய்யுங்கள். ஒரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன். ஆனால் நம்முடைய காவல்துறை தினம் தினம் அதனை அனுபவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com