முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு?

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு?
முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சசிகலா மனு?
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எப்போது விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம், அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் விடுதலையாவார் என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10.10 கோடி அபதாரத்தொகையும் அவரது சார்பில் சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் விரைவில் விடுதலையாகலாம் என்ற தகவல்கள் கசிந்தன. அவர் டிசம்பர் 3இல் விடுதலை செய்யப்படுவார் என்று வாய்மொழியாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் கர்நாடக சிறை அதிகாரிகள் முன்னதாக அவர் விடுதலையாக வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சசிகலா முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளிடம் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com