மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனை சசிகலா 3வது நாளாக சந்தித்தார்.
கர்நாடக சிறையிலிருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை தினமும் சந்தித்து வருகிறார். இன்றைய சந்திப்பின்போது, அவரோடு இளவரசியின் மகள் உள்ளிட்டோர் சென்றனர். மருத்துவமனையில் கணவர் நடராஜனை சந்தித்த பிறகு சசிகலா மீண்டும் இல்லம் திரும்பினார். கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உறுப்புகள் நல்ல நிலையில் செயல்படுவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.