“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்

“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்

“ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சஞ்சய் விடுதலை பொருந்தாது” - வழக்கறிஞர்
Published on

மத்திய அரசின் ஒப்புதல் இன்றியே நடிகர் சஞ்சய் தத்தை மாநில அரசு முன் கூட்டியே விடுவித்துள்ள நிலையில், அந்த முறை ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்டோருக்கு பொருந்தாது என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் விடுதலை குறித்து பேரறிவாளன் தரப்பு மகராஷ்டிரா சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தது. சுமார் மூன்று ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு மகராஷ்டிரா சிறைத்துறை அதிகாரிகள் பதில் அளித்திருப்பதாக பேரறிவாளன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பெறப்பட்ட தகவலில் சஞ்சய் தத்திற்கு மாநில அரசே பரோல் அளித்ததும், மத்திய அரசின் ஒப்புதலை பெறாமலே சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுவிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. சஞ்சய் தத்தை போன்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி பேசுகையில், “சஞ்சய் தத் விடுதலையுடன், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை ஒப்பிட முடியாது. பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோரை மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விடுவிக்கக்கூடாது என உத்தரவுள்ளது. ஏழுபேரை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு வாதத்தை எதிர்ப்பதாக மாநில அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இந்திய தண்டனைச்சட்டம் 433-வில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 28 ஆண்டுகள் சிறையிலிருப்போரை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com