சேலம்: நகைச் சீட்டு நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சேலத்தில் நகைச் சீட்டு நடத்தி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
jewellery owner
jewellery ownerpt desk
Published on

சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்த சபரி என்பவர் எஸ்.வி.எஸ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். இவர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகளை நிறுவி நகைச் சீட்டு மூலம் சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

CCTV Footage
CCTV Footagept desk

இதனிடையே மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் இரவோடு இரவாக தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகைக்கடை ஊழியர்கள் எட்டு பேரை பிடித்து வந்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக காவல்துறையிடம் ஒப்படைத்து தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

jewellery owner
நகைச் சீட்டு மோசடி: நகைக் கடையில் ஆய்வு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக நகைக்கடை உரிமையாளரை கைது செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com