சேலம் மாநகர துணை மேயர் சாரதாதேவி சைக்கிளில் சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சேலம் மாநகரின் முதல் பெண் துணை மேயர் என்ற பெருமைக்குரியவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதாதேவி. இவர், சேலம் மாநகராட்சி ஏழாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது வார்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாட்சி தினமான இன்று துணை மேயர் சாரதாதேவி, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக குடியிருப்புகள் அதிகம் நிறைந்த குறுகலான பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்தார். பொது சுகாதார வளாகங்கள் தேவை என்று அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.