ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் பிஎஸ்என்எல் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
Published on

தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சிக்கி தவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மாத சம்பளத்தை இன்னும் ஊழியர்களுக்கு வழங்கவில்லை எனத் தெரிகிறது. வழக்கமாக மாதத்தின் கடைசி நாள் அல்லது அடுத்த மாதத்தின் முதல் நாளில் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் சம்பளம் வந்துவிடும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தின் சம்பளம், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இன்னும் செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சிக்கி தவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சம்பளம் கொடுக்காமல், 1.70 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் நரேந்திர மோடி, அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com