சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் கோவி.மணிசேகரன் காலமானார்

சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் கோவி.மணிசேகரன் காலமானார்
சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் கோவி.மணிசேகரன் காலமானார்
Published on

சாகித்திய அகாடெமி விருதுப் பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் கோவி. மணிசேகரன் (95) இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.

1992 இல் இவரது வரலாற்றுப் புதினமான "குற்றாலக் குறிஞ்சி" தமிழுக்கான சாகித்திய அகாடெமி விருது பெற்றது. வேலூரில் பிறந்த மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இருந்தார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.

1992 இல் இவரது வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறிஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரிடம் 21 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்ஷே விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்:

சாகித்திய அகாதமி விருது - 1992
தினத்தந்தியின் சி. பா. ஆதித்தனார் விருது

எழுதிய பகுதி நூல்கள்:

தாஜ்மகால்
நித்திரை மேகங்கள்
திரிசூலி
காளையார் கோவில் ரதம்
காற்று வெளியிடைக் கண்ணம்மா

வரலாற்றுப்புதினங்கள்:

அக்னி வீணை
அக்னிக்கோபம்
அரண்மனை ராகங்கள்
அழகு நிலா
அஜாத சத்ரு
ஆதித்த கரிகாலன் கொலை
இந்திர விஹாரை
இளவரசி மோகனாங்கி
எரிமலை
கங்கை நாச்சியார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com