'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
Published on

பிரபல தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அவரது செல்லாத பணம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு தாமிர பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தமிழ் எழுத்தாளர் இமயத்திற்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அவரின் ’செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. 

சோ. தர்மனின் சூல் (நாவல்), எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் (நாவல்), கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் கவிதை தொகுப்பு, பூமணியின் அஞ்ஞாடி (நாவல்), ஜோ டி குரூஸின் கொற்கை (நாவல்), டேனியல் செல்வராஜின் தோல் (நாவல்), சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு இதுவரை சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டுள்ளன.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com