வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் பாம்பன் மீனவர் வலையில் அதிசய தாமரை வடிவிலான நண்டு சிக்கியது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தரங்கம்பாடி, பெருமாள்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், குட்டியாண்டியூர் புதுப்பேட்டை தூத்துக்குடி, ராமநாதபுரம் பாம்பன் போன்ற பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து வருகின்றனர்
இந்நிலையில் இன்று காலையில் மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பிய படகுகளில் அதிக அளவில் சீலா, வாளை, சங்கரா, பன்னா, நீலக்கால் நண்டு, புள்ளிநண்டு, போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. இதில் பாம்பன் மீனவர் சென்ற படகில் அதிசய நண்டு சிக்கியது. இந்த நண்டின் முன்புறம் காவி நிறத்திலும் பின்புறம் தாமரை பூ போல பாஜக கலரில் காவி பச்சை நிறத்தில் உள்ளது.
சிங்கி நண்டு, கிளிநண்டு, கல்நண்டு புள்ளிநண்டு என 40 வகையான நண்டுகள் உள்ள நிலையில் இதுபோல தாமரை பூ வடிவ நண்டை யாரும் பார்த்ததில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்