“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி

“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி

“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி
Published on

குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2017 ஆம் ஆண்டு கடுமையான வறட்சி வந்தது. அப்போது கூட நாம் சமாளித்து குடிநீர் வழங்கினோம். இன்று அந்த அளவுக்கு வறட்சி கிடையாது. இருந்தாலும் மழைப்பொழிவு மிகவும் குறைவு. கடந்த வருடமும் சென்னையில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. 2017ல் சென்னைக்கு 450 எம்.எல்.டி தான் தண்ணீர் கொடுத்தோம். ஆனால் தற்போது 525 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்து கொண்டு இருக்கிறோம். 

லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வறட்சியின்போது 7000 டிரிப் தான் கொடுக்கப்பட்டது. தற்போது 9 ஆயிரத்து 100 டிரிப் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் லாரி சர்வீஸ் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. மழைப்பொழிவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. எதிர்கட்சிகள் செய்ததை விட தற்போதைய அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது. 

இதை ஊடகங்கள் எடுத்து சொல்ல வேண்டும். பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இந்த மூன்று ஆண்டுகளில் 15 ஆயிரத்து 810 கோடி மதிப்பில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சென்னை மாநகரப் பகுதியில் 2638. 42 கோடி ஒதுக்கி 4092 பணிகள் நடைபெற்றுள்ளது. 

அதேபோல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 5346 கோடியில் 268 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சி பகுதிகளில் 196 கோடியில் 4417 பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரகப்பகுதிகளில் 1929 கோடி மதிப்பீட்டில், ஒரு லட்சத்து எட்டு பணிகள் முடிவுற்று இருக்கின்றன. தமிழகத்தில் 62 சதவிகிதம் குறைவான மழை பெய்துள்ளது. 

சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், ஆகியோரை சந்தித்து குறிப்பாக குடிநீர் தேவைக்காக 5000 கோடி தேவைப்படுவதாக சொன்னோம். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுபேற்ற பின்னால் பல்வெறு திட்டங்களுக்கு நிதி வாங்கி வந்திருக்கிறேன். மத்திய அரசும் ஒதுக்கி கொடுத்துள்ளது. எனவே தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாய கிணறு நீர் மூலம் சென்னைக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. நெய்வேலி சுரங்கத்திலிருந்தும் நீர் பெறப்படுகிறது.” எனத்  தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com