தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கூட்டுறவு அமைப்புகள் தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. (1/3)</p>— TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://twitter.com/TTVDhinakaran/status/1342364148793966592?ref_src=twsrc%5Etfw">December 25, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ஏற்கெனவே நலிந்து கிடக்கும் கூட்டுறவு அமைப்புகளை மேலும் சீர்குலைக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை ஆளுங்கட்சியினர் உடனடியாக நிறுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் கடனுதவி சரியான நபர்களுக்குச் சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்; எந்தவிதமான முறைகேட்டுக்கும் இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்