வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Published on

கொரோனா அறிகுறியுடன் வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி,தனிக் கழிவறை உடன் கூடிய காற்றோட்டமுள்ள தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறைக்குள் நுழையக் கூடாது. சத்தான உணவைச் சாப்பிடுங்கள், மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக் கொள்ளுங்கள்.போதுமான அளவு தண்ணீர் பழரசம் குடிக்கவும்.

பிறரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள், மீறி தொடர்புகொள்ள நேரிட்டால் சர்ஜிகல் அல்லது N95 முக கவசம் அணிந்து பேசுங்கள்.போதிய ஓய்வும் தூக்கமும் அவசியம், சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதைத் தவிர்க்கவும். அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து கைகளைக் கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள். பொருட்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது, கழிவுகளைத் தனிப் பையில் சேகரித்து அப்புறப்படுத்தவும்.பல்ஸ் ஆக்சிமீட்டரின் மூலம் ஆக்சிஜன் அளவையும் (SPO2), அபாய அறிகுறிகளையும் கண்காணியுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com