செய்தியாளர்: மருதுபாண்டி
‘தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் எத்தனை கருக்கலைப்புகள் நடைபெற்றுள்ளன?’ என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குடும்ப நல இயக்ககத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு தமிழகம் உட்பட 38 மாவட்டங்களில் இருந்து தகவல்களை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதில் எம்.ஐ.டி ஆக்ட்டின் படி ‘தூண்டப்படும் கருக்கலைப்புகள்’, ஃபார்ம் 3-ன் படி சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களின் வயது பற்றிய தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01-01-2021 முதல் 30-06-2024 வரை
15 -19, 20 - 24, 25-29, 30 - 34, 35- 39,40 - 44, 45+ க்கு மேல் ஆகிய வயது அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது
அதன்படி தமிழகம் முழுவதும் 42 மாதங்களில் 19 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டும் சுமார் 3 லட்சத்து 28,970 கருக்கலைப்புகள் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : 25,423
சேலம் : 22,707
ஈரோடு : 17,067
கோவை : 16,820
திருச்சி : 15,303
திருவண்ணாமலை : 12,794
திருப்பூர் : 11,568
மதுரை : 11,325
நீலகிரி : 2958
காஞ்சிபுரம் : 2952
ராணிப்பேட்டை : 3042
மேலும் 19 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை சிறப்பு ஆணை அல்லது நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேற்பட்ட வாரங்கள் கடந்தால் மட்டுமே சிறப்பு ஆணைகள் உத்தரவும்படி கருக்கலைப்புகள் சிறுமிக்கு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சிறுமிகள் கருக்கலைப்பு தொடர்பான தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் சிறுமிகள் தொடர்பான தகவல்களை மருத்துவத்துறையின் ஊரக நல பணி இயக்ககம் மற்றும் பொது சுகாதார துறையின் நோய் தடுப்பு மருந்து இயக்கக மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையன்றி பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக நடந்த கருக்கலைப்புகள் என்று அஞ்சப்படுகிறது.