தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ஒருவர் மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக மேகதாது அணையின் நிலவரம் தொடர்பாக கேள்விகளை கேட்டுள்ளார். இதில், “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு தற்போது வரை எந்தவிதமான அனுமதியும் அளிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூரு நகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மேகதாதுவில் அணை அவசியம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி இருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. மேலும் மேகதாது அணையைக் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் செயலாளர் ஆகியோர் இரண்டு முறை இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.