கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Published on

மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு பகுதிகளில் அரசு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1109 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர்மீது 3 வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 4,553 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல்செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு, மேலவளவு உள்ளிட்ட பல கிராமங்களில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது, அரசு புறம்போக்கு நிலங்களில் அடுக்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட 67 பேர் மீது மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில்  இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4553 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களை அரசு வழக்கறிஞர் ஷீலா, கிரானைட் முறைகேடு சிறப்பு காவல் ஆய்வாளர்கள் பிரகாஷ் மற்றும் ராஜாசிங் ஆகியோர் தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டம் கீழவளவு மற்றும் நாவினிப்பட்டி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசுக்கு ஆயிரத்து 109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com