தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் ரூ.9,395 கோடி..!

தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் ரூ.9,395 கோடி..!
தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் ரூ.9,395 கோடி..!
Published on

நாட்டிலுள்ள மொத்த தபால் நிலையங்களிலும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய அமைச்சகத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

நாட்டின் மூலை முடுக்குகளிலும் உள்ள ஏழை எளிய மக்கள், தங்கள் பாதுகாப்பிற்காக சிறு தொகையை சேமிக்க தபால் நிலையங்களை நாடுவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற சிறுசேமிப்பாளர்களின் 9,395 ‌கோடி ரூபாய், இதுவரை உரிமை கோரப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களான கிசான் விகாஸ் பத்திரம், மாத வருவாய் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், PPF, RD, TERM DEPOSIT உள்ளிட்டவைகளில் இந்த நிதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரங்களில் 2,429 கோடி ரூபாயும், மாத வருவாய் திட்டத்தில் 2,057 கோடி ரூபாயும் உரிமை கோரப்படாமல் இருக்கிறது. அதேபோல, தேசிய சேமிப்புப் பத்திரங்களில் 1,888 கோடி ரூபாயும், PPF-ல் 289 கோடி ரூபாயும் உரி‌மை கோரப்படாமல் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், RD-யில் 796 கோடி ரூபாயும், TERM DEPOSIT-ல் 1,935 கோடி ரூபாயும் உரிமைக் கோரப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com