டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்மாக் அறிவிப்பால் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750லிருந்து ரூ.13,250 ஆக அதிகரிக்கிறது. மேலும் விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.11,100ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,000ஆகவும், தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750இல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.