செய்தியாளர்: சாந்தகுமார்
சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் கடத்திச் செல்வதாக தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது அதில் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் பயணம் செய்தனர். அவர்களை விசாரித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், சதீஷ் (34), என்பவர், ‘திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தான் என்னுடைய முதலாளி, நான் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய புளு டைமண்ட் விடுதியின் மேலாளராக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சதீஷின் தம்பி நவின் (31), மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் பெருமாள் (24), ஆகியோரை தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் வீட்டிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானவர்களிடம் இருந்து பணம் பிடிபட்டது குறித்து ‘வாக்குக்கு பணம் கொடுக்கமாட்டோம்’ எனக்கூறிய அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந் திரனுக்கு சொந் தமான பணம் பிடிபட்டத் தொடர்பாக திமுக தேர்தல் அ திகாரியிடம் புகார் அளித்துள்ளனர். “அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும்” என தமிழக தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.