ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2.50 கோடி நிதி - தமிழக அரசு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2.50 கோடி நிதி - தமிழக அரசு
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2.50 கோடி நிதி - தமிழக அரசு
Published on

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திர கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள இரண்டரை கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பசந்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் பல்வேறு உதவிகளை செய்தனர். அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென் பிராந்திய தலைமை அதிகாரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், அந்த கிராமத்தில் நடைபாதை வசதி, தடுப்பு சுவர் அமைத்தல், பழுதான வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com