சென்னை புதுப்பேட்டை பகுதியில் தண்ணீர் தேங்கும் குப்பைகளை மாநாகராட்சியினரே முன்வந்து அகற்றி, கடை உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக சென்னை முழுவதும் உள்ள 2,000 கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குப்பைகளை அகற்ற ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருந்த நிலையில், கடையின் உரிமையாளர்கள் தண்ணீர் தேங்கிய குப்பைகளை அகற்றாததால் மாநகராட்சி நிர்வாகத்தினரே முன்வந்து குப்பைகளை அகற்றினர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை அகற்றாதபட்சத்தில் அபராத தொகை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்த டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையில், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தொற்று நோய் தடுப்பு இயக்குர் குழந்தைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். வாரந்தோறும் வியாக்கிழமை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடரும் எனவும் கூறியுள்ளனர்.