மாடு, நாய் வளர்ப்பவர்களிடம் ஆண்டுக்கு 10ரூபாய் உரிமைத் தொகை வசூல் : மதுரை மாநகராட்சி

மாடு, நாய் வளர்ப்பவர்களிடம் ஆண்டுக்கு 10ரூபாய் உரிமைத் தொகை வசூல் : மதுரை மாநகராட்சி
மாடு, நாய் வளர்ப்பவர்களிடம் ஆண்டுக்கு 10ரூபாய் உரிமைத் தொகை வசூல் : மதுரை மாநகராட்சி
Published on

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடு, எருமை, குதிரை நாய்களை வளர்ப்போர், தங்கள் செல்லப்பிராணிகளை 10 ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவுசெய்துக் கொள்ள வேண்டும் என்றும் சாலைகளில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விட்டால் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரை, நாய்கள் போன்ற கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் அலட்சியமாக அரிய விடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவதோடு, கால்நடைகளும் காயமடைவதாகவும், நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் மதுரை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகை மற்றும் உரிமம் வசூலிப்பு தொகையை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ‘மதுரை மாநகரில் இறைச்சி-மீன், இறைச்சி கடைகள் வைத்திருப்பவர்கள் அந்த கடைகளின் அளவுக்கு (ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ.10) ஏற்றபடி கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். அதேபோல் இனி வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் மாநகராட்சியில் ஆண்டுக்கு 10 ரூபாய் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் மதுரை மாநகராட்சிகுட்பட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூ.5,000 அபராதமும், தெருக்களில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விடும் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதமும், தெருக்களில் அச்சுறுத்தும் மற்றும் சுகாதாரசீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திடக்கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைகளுக்கு 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள மதுரை மாநகராட்சி நிர்வாகம். இந்த அபராத விதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துபூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவக்கலாம் எனவும் கூறியுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் மதுரை மாநகராட்சி இத்தகைய நடவடிக்கையயை எடுத்துள்ளதாகவும், இந்த உரிமம் மற்றும் அபராதத்தொகை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்க கால அவகாம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் தகவல் கொடுத்துள்ளார்.

- செய்தியாளர்: மணிகண்டபிரபு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com