பூந்தமல்லி: பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.1 கோடி – ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

பூந்தமல்லியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Election flying squad
Election flying squadpt desk
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணத்தை தொடர்ந்து பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

Money seized
Money seizedpt desk

இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இரண்டு வாகனங்களில் தனியார் நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் விற்பனையான ரூ.1 கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்ய சென்றுள்ளனர்.

Election flying squad
வாணியம்பாடி: வாகன சோதனையில் சிக்கிய ரூ.65 லட்சம் – உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

இந்நிலையில், பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ், தேர்தல் நடத்தும் துணை தாசில்தார் விஜய் ஆகியோர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணத்தை ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com