ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ரூ.4 லட்சம்... ஸ்கெட்ச் போட்டதில் முக்கியபுள்ளி... யார் இந்த சம்போ செந்தில்?

அடுத்தடுத்து அதிர்ச்சி என்பதாகத்தான் இருக்கிறது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை... இந்த வழக்கில், மிகவும் அபாயகரமான குற்றவாளி என, குற்றப்பதிவேடு கொண்ட சம்போ செந்திலைப் பிடிக்க, காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங்க் - சம்போ செந்தில்
ஆம்ஸ்ட்ராங்க் - சம்போ செந்தில்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: அன்பரசன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்போ செந்தில் என்ற 'A ப்ளஸ்' ரவுடிக்கும் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் மூலம் வழக்கறிஞர் அருளுக்கு அறிமுகமான சம்போ செந்தில், 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

யார் இந்த சம்போ செந்தில்...?

சம்போ செந்தில்
சம்போ செந்தில்

தென்சென்னையின் மோஸ்ட் வாண்டட் ரவுடிதான் இந்த சம்போ செந்தில். காவல்துறையின் குற்றப்பதிவேட்டில், மிகவும் அபாயகரமான ரவுடி என்ற அடிப்படையில், ' A ப்ளஸ்' என்ற கேட்டகரியில் இருப்பவர். தூக்குக்குடிதான் சம்போ செந்திலின் பூர்விகம். வெங்கடேச பண்ணையாரின் நெருங்கிய ஆதரவாளர்.

வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (எ) சம்போ செந்தில், சென்னையில் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு, தண்டையார்பேட்டையில் கல்வெட்டு ரவி என்ற ரவுடி மீதான வழக்குகளுக்காக ஆஜராகி, அவருடன் கரம் கோர்த்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்- கல்வெட்டு ரவி
ஆம்ஸ்ட்ராங்- கல்வெட்டு ரவி புதிய தலைமுறை

வழக்கறிஞர் பணியில், ரவுடிகள் மீதான குற்ற வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்தியதில், ரவுடிகள் வட்டத்தில் நெருக்கமாகியுள்ளார். பின்னர், கல்வெட்டு ரவியின் கேங்கிலேயே சங்கமித்துள்ளார். ஒரு சமயம், காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி ஆகியோரின் கூட்டாளிகள், கல்வெட்டு ரவியைத் தாக்க முற்பட்டபோது, அவரைக் காப்பாற்ற களத்தில் இறங்கி முழுநேர ரவுடியாகியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்க் - சம்போ செந்தில்
ஆகஸ்ட்டில் பதவிக்காலம் முடிவு! மீண்டும் நீட்டிக்கப்படும் பதவி? ஆளுநரின் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?

குற்றச்சம்பவங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக, துல்லியமாக ஸ்கெட்ச் போடுவதில் வல்லவராக இருந்ததால், ரவுடிகளின் நிழல் உலகில், இவருக்கு சம்பவம் செந்தில் என்று பெயராம். இந்தப் பெயர், காலப்போக்கில் சம்போ செந்தில் ஆகியுள்ளது.

சம்போ செந்தில் மேலுள்ள வழக்குகள்:

காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு காவல் எல்லையில் வழக்கறிஞர் காமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், சேர்க்கப்பட்டிருந்த சம்போ செந்தில், பின்னர் விடுவிக்கப்பட்டார். திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை வழக்கில், சம்போ செந்தில் மூளையாக செயல்பட்டதாகக் கூறுகிறது காவல்துறை. முத்தியால்பேட்டையில், ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்று சொல்லப்பட்ட விஜயகுமார் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கிலும் சம்போ செந்திலை சேர்த்துள்ளது காவல்துறை.

ஒரு கட்டத்தில், கல்வெட்டு ரவி ரவுடியிசத்திலிருந்து ஒதுங்கிவிட, காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி உள்ளிட்டோரை எதிர்ப்பவர்களுக்கு தலைவனாக வளர்ந்துள்ளார் சம்போ செந்தில். 2019 ஆகஸ்ட் மாதம், எண்ணூரில் காருக்குள் வைத்து ஜேம்ஸ்பால் என்ற ஒப்பந்ததாரர் கொல்லப்பட்ட வழக்கில், இந்த கும்பலுக்குள் பகை வெடித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்க் - சம்போ செந்தில்
ஒபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு – எதற்காக தெரியுமா?

இரு கும்பலுக்கும் இடையிலான மோதலில் இதுவரை ஐந்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறது சென்னை காவல்துறை. 2020 ல் சம்போ செந்திலின் கூட்டாளிகளான ஈசா - 'எலி' யுவராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில், அண்ணா சாலையில் சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜியின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் காவல்துறையின் பதிவேடுகள் கூறுகின்றன.

ஏற்கனவே, 4 கொலைகள் உட்பட 10 க்கும் அதிகமான குற்ற வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளார் சம்போ செந்தில். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்த சம்போ செந்தில், அதன் பிறகு தலைமறைவாகவே இருப்பதால் அடையாளம் காண்பதே கடினம் என்கிறது காவல்துறை தரப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com