சென்னையில் பரபரப்பு.. என்கவுன்டரில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக் கொலை.. பின்னணி என்ன?

சென்னை புளியந்தோப்பு பகுதியில் காவல்துறையினர் சுட்டதில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி உயிரிழந்துள்ளார்.
ரவுடி காக்காதோப்பு பாலாஜி
ரவுடி காக்காதோப்பு பாலாஜி புதியதலைமுறை
Published on

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் போலீசாரால் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்டதில், உயிரிழந்தார்.

பல்வேறு குற்றச்சம்பவங்களோடு தொடர்புடையவராக இருக்கும் காக்க தோப்பு பாலாஜி, காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி (36) . இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஏழு கிணறு பகுதியில் உள்ள காக்கா தோப்பு என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்ததால் சக ரவுடிகளால் காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டார்.

பிரபல ரவுடியாக அறியப்படும் இவர், 2009 ம் ஆண்டு ரவுடி சதீஷ் என்பவரை கொலை செய்தார். 2011ம் ஆண்டு வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி மனைவியின் கண் முன்னே பில்லா சுரேஷ் என்பவரை காக்கா தோப்பு பாலாஜி தரப்பு கொலை செய்தனர். அடுத்த சில மணி நேரங்களில் ரவுடி விஜி (எ) விஜய குமார் கொலை செய்தனர்.

தொடர்ந்து, 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் காக்காதோப்பு பாலாஜியும் அவரது நண்பரான சி.டி மணியும் தேனாம்பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, ரவுடி சம்போ செந்தில் தரப்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி காக்கா தோப்பு பாலாஜியை கொலை செய்ய முயற்சி செய்தது.

ரவுடி காக்காதோப்பு பாலாஜி
50% அதிகரிக்கிறதா குடியிருப்புகளின் விலை? சென்னையில் வீடு வாங்குவோர் கவனத்திற்கு..

இதனையடுத்து, மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவரும் இவரே. ரவுடிகளுக்கு இடையே நடந்த கொலைகள், கூலிப்படைகளை ஏவிக் கொல்லுதல் போன்ற காரியங்களால் சென்னையின் பல காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மேலும், ஆட்கடத்தல், கட்டபஞ்சாயத்து என 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி சென்னை மோஸ்ட் வாண்டட் ரவுடியாக மாறியுள்ளார். எனவே, நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த இவரை போலீஸ் தேடி வந்துள்ளது.

இந்நிலையில்தான், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், இவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரவுடி காக்காதோப்பு பாலாஜி
“கிரீம் பன்னுக்கு எவ்வளவுவரி என கேட்கமுடியாத நிலை” முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கூடுதலாக, காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றதிலிருந்து சென்னையில் நடைபெறும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com