கல்லூரி மாணவர்கள் யாரேனும் ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் புகார் அளிக்க காவல்துறை வாட்ஸ் அப் எண் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியதுடன் சக மாணவர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு காரணம் ‘ரூட் தல’ பிரச்னை தான் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பல ‘ரூட் தல’ மாணவர்களை பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவர்களிடம் உறுதிமொழி வாங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் மாணவர்கள் அட்டூழியத்தை ஒழிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் யாரேனும் ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் புகார் தராலம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் பற்றி வாட்ஸ் அப் எண் 9087552233-ல் புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் www.facebook.com/chennaipolice, www.twitter.com/chennaipolice-l புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பேருந்து நிறுத்தம், பேருந்துகளில் விளம்பரம் செய்ய சென்னை காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.