மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடியில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் - பாரிவேந்தர் எம்.பி

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடியில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் - பாரிவேந்தர் எம்.பி
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடியில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் - பாரிவேந்தர் எம்.பி
Published on

பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர், ரயில்வே வாரியத்தின் சேர்மனுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடி ரயில்நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அவ்வாறு நின்று சென்றால் அது பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும். சோதனை முயற்சியாக ஒரு மாத காலத்திற்கு இதை செய்து பார்த்து, மக்கள் வரவேற்பை ஆராய்ந்து இதை தொடர்வது குறித்து முடிவெடுக்கலாம்.

அடுத்ததாக கொரோனாவிற்கு முன்னர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா தொற்றிற்கு பின் ரயில் இயக்கப்பட்ட போது அது கல்லக்குடி பழங்காநத்தத்தில் நிற்காமல் சென்று வருகிறது. வழக்கம்போல மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கல்லக்குடி ரயில்நிலையத்தில் நின்று சென்றால் அது பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இறுதியாக அரியலூர் முதல் நாமக்கல் வரை பெரம்பலூர், துறையூர் வழியாக 108 கி.மீ நீளத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் வழித்தடத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். 50 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி மக்களின் கனவாக திகழும் இந்த திட்டம் குறித்து பிரதமர், ரயில்வே அமைச்சர் ஆகியோரிடம் தனிப்பட்ட முறையிலும், 2 முறை பாராளுமன்ற உரையிலும் பேசியிருக்கிறேன். ஆகவே அத்திட்டம் எந்த நிலையில் செயலாக்கம் பெற்று வருகிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com