ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ராபர்ட் பயஸ் 30 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.
மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு ராபர்ட் பயஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு பயஸுக்கு பரோல் வழங்கப்பட்டது. பரோல் காலத்தில், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடாது என்பன உள்ளிட்ட சிறைவிதிகளை பின்பற்றுமாறு பயஸுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைத்துறை நடைமுறைகளுக்கு பின் இன்று காலை ராபர்ட் பயஸ் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார். சென்னை நீலாங்கரையிலுள்ள, அவரது வழக்கறிஞர் தடா சந்திரசேகர் வீட்டில் தங்கி, தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை பயஸ் கவனிக்கவுள்ளார்.