நீலகிரி: சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கால் விளைநிலங்களை சூழ்ந்த ஆற்றுநீர்

நீலகிரி: சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கால் விளைநிலங்களை சூழ்ந்த ஆற்றுநீர்
நீலகிரி: சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கால் விளைநிலங்களை சூழ்ந்த ஆற்றுநீர்
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பந்தலூரில் சாலையில் மரம் விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலைமுதல் பெய்யத்தொடங்கிய மழை தற்போது வரை நீடிக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி நிலவரப்படி தேவாலாவில் 81 மில்லிமீட்டரும் கூடலூரில் 71 மில்லிமீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. தொடர் கனமழை காரணமாக கூடலூரில் உள்ள பல்வேறு சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சலிவயல் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடும் சிற்றாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த விவசாய நிலங்களுக்குள் ஆற்று நீர் புகுந்தது.

வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. பந்தலூரில் கனமழை காரணமாக சேரம்பாடி செல்லும் சாலையில் மரம் விழுந்து சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பந்தலூர் சர்வீஸ் ஸ்டேசன் பகுதியில் வீடு ஒன்றில் தடுப்புச்சுவர் இடிந்துவிழுந்தது. தொடர்மழையால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com