முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து 118 அடியாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3438 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 2,267 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதனால் தேனி, மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து நீர்த்திறப்பும் விநாடிக்கு 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் தமிழக பாசன நீர்த் திறப்பிற்கு போதுமானதாக உள்ளதால், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தமிழக அரசின் நீர் திறப்பு அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளன.