மயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை

மயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை
மயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை
Published on

பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிப்பாளையத்தை ஒட்டிய வனப்பகுதியில் தஞ்சமடைந்தி‌ருந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

ஆண்டியூர் வனப்பகுதி நவமலை மற்றும் அர்த்தனாரிபாளையம் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை அரிசி ராஜாவை பிடிக்கும் பணி கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இதையடுத்து டாப்சிலிப் கோழிகுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் கலீம் மற்றும் பாரி வரவழைக்கப்பட்டன. கும்கி பாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அதற்கு பதிலாக கும்கி கபில்தேவ் வரவழைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று இரவு ஆண்டியூர் பகுதி தென்னந்தோப்புக்குள் இருந்த அரிசி ராஜாவை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் சுற்றிவளைத்தனர். பின்னர் மருத்துவக் குழுவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக இரவு 9.45 மணிக்கு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அதிகாலை 3 மணிக்கு மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு கும்கி யானை கலீம் உதவியுடன் காட்டு யானை அரிசி ராஜாவை லாரியில் ஏற்றும் பணிகள் தொடங்கியது. காட்டு யானை அரிசி ராஜா டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com