மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வினால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் சில்லறை விற்பனைக்கும், மொத்த கொள்முதலுக்கும் இடையே 6 ரூபாய் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் இல்லாதபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த திமுக தற்போது டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து அறிக்கை விடவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை வருவாய்க்காக இரட்டை கொள்கை விலையை திமுக வரவேற்கிறது போலும் என்றும் இது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.