கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - வேறு இடத்திற்கு மாற்றம்..!

கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - வேறு இடத்திற்கு மாற்றம்..!
கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு - வேறு இடத்திற்கு மாற்றம்..!
Published on

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு‌, காவல் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த வாரம் வானகரம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நெல்லூர் மருத்துவரின் உடலை தகனம் செய்ய இருவேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com