தலைதூக்கிய தண்ணீர் பிரச்னை - கொரோனா காலத்திலும் குடங்களோடு தெருதெருவாய் அலையும் மக்கள்..!

தலைதூக்கிய தண்ணீர் பிரச்னை - கொரோனா காலத்திலும் குடங்களோடு தெருதெருவாய் அலையும் மக்கள்..!
தலைதூக்கிய தண்ணீர் பிரச்னை - கொரோனா காலத்திலும் குடங்களோடு தெருதெருவாய் அலையும் மக்கள்..!
Published on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடக்கூடாது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும் இதில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மோகூர் கிராமத்தில் சுமார் 3000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வாரம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலி குடங்களுடன் அங்குமிங்கும் அலைந்து வருகின்றனர்.

ஆகையால் இதனை அதிகாரிகள் உடனடியாக கருத்தில் கொண்டு, குழாய் அமைத்து தண்ணீர் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com