ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 7ஆம் வகுப்பு மாணவி 60 கிமீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கலத்தம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அன்னபள்ளம் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதில், 5 ஏக்கர் பரப்பளவில் வீடுகள் மற்றும் விளை நிலங்களாக ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புவனேஸ்வர் என்பவரின் மகள் செம்மொழி, அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்தார்.
இன்று ஆதிகாலை முதல் சாரல் மழை பெய்த நிலையில், நனைந்தபடி சைக்கிளில் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளிக்க உள்ளார். ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றாவிட்டால் சென்னைக்கு சைக்கிளில் சென்று முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளதாக மாணவி தெரிவித்தார்.