உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி ஆங்கிலத்தோடு, ஹிந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது. இதன்மூலம் உலகிலேயே தீர்ப்பு விவரங்களை ஐந்து மாநில  மொழிகளிலும் வெளியிடும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவதை திமுக மகிழ்ச்சியோடு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் செம்மொழியான தமிழ்மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை திமுக சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com