கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கப் போவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குடபட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்படவுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு பெய்த கன மழை காரணமாக வினாடிக்கு 775 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு.
ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் காலை 9 மணிக்கு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்படவுள்ளது. காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியனின் 3540 மில்லியன் இருப்பு உள்ளது.ஏரியின் நீரமட்டம் 24 அடியில் 23.60 அடி உயர்ந்தது. ஏற்கனவே 23 அடி நீர்மட்டம் வைத்து கண்காணிக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூடுதலாக 250 கன அடி தற்போது வெளியேற்ற போவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.