‘இது எங்க பாதை... விடமாட்டோம்’ எனக்கூறி சடலத்தை தூக்கிசெல்ல எதிர்ப்பு – உறவினர்கள் போராட்டம்!

பள்ளியாடி அருகே மூதாட்டியின் சடலத்தை தகனம் செய்ய எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால், உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Argument
Argumentpt desk
Published on

செய்தியாளர்: எஸ்.சுமன்

குமரி மாவட்டம் பள்ளியாடி அருகே அம்முகுட்டி (80) என்ற மூதாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை, சுடுகாட்டுக்கு அருகே உள்ள அவர்களது சொந்த நிலத்தில் தகனம் செய்ய நேற்று எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ஒருவர், உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் “இந்த பாதை எங்களது பாதை” என்று கூறியுள்ளார்.

Road blocked
Road blockedpt desk

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்களும், பொதுமக்களும் ஆனைபாறை பேக்கிவிளை பகுதியில் சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஆக்கிரமித்து வைத்துள்ள சுடுகாடு செல்லும் பாதையை உடனே கையகப் படுத்த வேண்டும், சொந்த நிலத்தில் தகனம் செய்ய விடாமல் தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

Argument
கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த மார்தாண்டம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை அடுத்து உறவினர்கள் மூதாட்டியின் உடலை தகனம் செய்தனர். இச்சம்பவத்தால் சில மணி நேரம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com