நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விளாமரத்துபட்டி மற்றும் பாப்பனூத்து கிராம பொதுமக்கள் இணைந்து ரேக்ளா பந்தயம் நடத்தினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி நடத்தபட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் ஆர்வத்துடன் 300க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளுக்கு தங்கநாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள், கோப்பை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்து பந்தய தூரத்தை கடந்து சென்றன. ரேக்ளா பந்தயத்தை இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். காங்கேயம் இன காளைகளை அழியாமல் பாதுகாக்கவும் இந்த போட்டியின் மூலம் வலியுறுத்தப்பட்டது.