நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட் ..மீனவர்களுக்கு எச்சரிக்கை.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட் ..மீனவர்களுக்கு எச்சரிக்கை.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட் ..மீனவர்களுக்கு எச்சரிக்கை.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
Published on

24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக கன மழையும் கோவை ,தேனி ,மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை, சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் தேவலா 34 செ.மீ, பந்தலூர் 19 செ.மீ, ஹாரிசன் 18 செ.மீ, அவளஞ்சி 11செ.மீ, நடுவட்டம், கூடலூர் பஜார் தலா 8 செ.மீ, மேல் பவானி 7 செ.மீ, மேல் கூடலூர் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லார் 13 செமீ, சேலையூர் 11 செ.மீ, சின்கோனா 9 செ.மீ, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஆகஸ்ட் 8ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரள கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவுகள் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடல் அலை முன்னறிவிப்பு:

ஆகஸ்ட் 8: தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9.8 2020 இரவு 11.30 மணி வரை உயர் கடல் அலைகள் 3.5 முதல் 4.5 மீட்டர் வரை எழும்பக்கூடும்.  

ஆகஸ்டு 9: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகள் லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 10: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு அரபிக்கடல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 11: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கொண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com