ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
Published on

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன் கீழ் மனு எண் 97ஃ2016 வெளியேற்று வழக்கை கோவில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது வழக்கின் முடிவில் 2019 பிப்ரவரி 25ஆம் தேதி இணை ஆணையர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூபின் சார்லஸ் என்பவரை கோவில் இடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூபின் சார்லஸ் கோவில் இடத்திலிருந்து வெளியேறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை விட்டு வெளியேறாததை அடுத்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டனர்.

போது ரூபின் சார்லஸ் மனைவி பிரேமலதா தடுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு சுவாதீனம் எடுத்து காம்பவுண்ட் கேட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com