பணியிடமாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர்.. பின்னணியில் இருக்கும் மூன்று முக்கிய காரணங்கள்!

சந்திப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது உள்ள மூன்று முக்கியமான சர்ச்சைகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தீப் ராய் ரத்தோர்
சந்தீப் ராய் ரத்தோர் முகநூல்
Published on

செய்தியாளர் ஜெ.அன்பரசு

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட முக்கிய காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் முன் வைத்தன. இதனையடுத்து முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சென்னை காவல்துறையில் முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி-யாகவும், கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளார். சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையக இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்தை, சென்னை சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமித்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர்
“ஒரு இடத்தில் மட்டும் நீட் வினாத்தாள் கசிந்தது” - ஒப்புக்கொண்ட NTA.. கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்!

சந்தீப் ராய் ரத்தோர் மீது இருக்கும் மூன்று சர்ச்சைகள்

சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது உள்ள மூன்று முக்கிய சர்ச்சைகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. புதிதாக கொண்டுவரப்பட்ட BNS சட்டம் தமிழக அரசு மற்றும் தமிழக அரசு துறைகள் எதிர்த்து வந்த நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த ரத்தோர் சில தினங்களுக்கு முன்பாக, “புதிய BNS சட்டம் என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம்” என்று கூறியிருந்தார். இது காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், அரசுத்துறை அதிகாரிகள் தரப்பிலும், அரசு தரப்பிலும் காவல் ஆணையராக இருந்த ரத்தோர் மீது பெரிய அதிருப்தியை உண்டு செய்தது.

சென்னை ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர் முகநூல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் போது இரண்டு மாதங்களுக்கு முன்பே, நுண்ணறிவு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு மூன்று முறை அலெர்ட் கொடுத்துள்ளது. ஆனால் ரத்தோர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், “காவல்துறைக்கு எந்தவிதமான அலெர்ட்டும் வரவில்லை” என கூறியிருந்தார்.

சந்தீப் ராய் ரத்தோர்
“அவரை போக விடாதீர்கள்..” - பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்.. கண்ணீர் மல்க போராடிய கிராம மக்கள்!

காவல்துறை வரலாற்றிலேயே முதன்முறை நடந்த சம்பவம்

ஏற்கனவே, தனியார் நிறுவன கட்டப்பஞ்சாயத்தில் தலையிட்டு ரூபாய் 50 கோடி வரை பணம் வாங்கியதாக ரத்தோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இந்த 50 கோடி ரூபாய் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்போவதாக நுண்ணறிப் பிரிவு போலீசார் அலெர்ட் செய்திருந்தனர்.

சந்தீப்ராய் ரத்தோர், அருண்
சந்தீப்ராய் ரத்தோர், அருண்புதியதலைமுறை

இதனையடுத்து காவல்துறை வரலாற்றிலேயே சென்னை காவல் ஆணையர் அலுவலகம் ஒரு வார காலம் கேட் மூடி வைக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலக கேட்டுகள் அனைத்தும் மூடப்பட்ட சம்பவமானது காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியது.

இது மட்டுமல்லாமல் சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை நடந்தது. இதையடுத்து சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தீப்ராய் ரத்தோரை காவல்துறை பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும், கூடுதல் பொறுப்பாக போலீஸ் அகாடமி டிஜிபியாகவும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சந்தீப் ராய் ரத்தோர்
தென்காசி: குடும்ப பிரச்னையில் பெண் வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு – டாக்டர் கணவரும் விபரீத முயற்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com