தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? குஷ்பு ஓபன் டாக்!
செய்தியாளர்:விக்னேஷ்முத்து
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தேசிய கொடியை ஏற்றினார். உடன் பாஜக நிர்வாகி குஷ்பூ ,பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா துணைத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து பாஜக மாநில அலுவலக கமலாலயத்தில் குஷ்பூ வருகை தந்திருந்தார் சுதந்திர தின கொடியேற்று நிகழ்வில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு
”அந்தப் பொறுப்பில் ஈடுபடும் போது கட்சி சார்ந்த வேலைகள் ஈடுபட முடியாது வருத்தமாக இருந்தது. இந்த பொறுப்பை ஏற்ற பின்பு கமலாலயத்துக்கு வரவே இல்லை.
என்னுடைய மனசு,கவனம்,முழுவதும் அரசியலில் தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கு பாஜகவின் காரியக்கர்தாவாக பணியாற்றுவதால் திருப்தியாக உள்ளது.
கட்சிக்காக பணியாற்ற விருப்பமுள்ளதால்தான் வந்திருக்கிறேன். எந்த ஒரு பாஜக சார்ந்த நிகழ்வுகளையும் விவாதத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது, கட்சி சார்பாக குரல் கொடுக்க வேண்டும் என்று இறங்கப் போகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பாரத தேசம் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்று நமக்கு தெரிகிறது. அப்படி இருக்கும்போது நாடு முன்னேற்றம்தான் முக்கியம். நான் முன்னேற வேண்டும் என்பது முக்கியமில்லை.
இன்று தான் வந்துள்ளேன்... அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. தேசிய கொடி ஏற்றும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.
நான் பதவிலிருந்து ராஜினாமா செய்வது குறித்து, கிட்டத்தட்ட 6,7 மாதத்திற்கு முன்பே பேச ஆரம்பித்து விட்டேன். அதில் இருக்கும் போது என்னால் பாஜகவிற்கு வேலை செய்ய முடியவில்லை. இது குறித்து மேலிடத்தில் உள்ள தலைவர்களிடம் பேசினேன். போன மாதம் கேட்டேன் தற்போது தான் அதனை ஏற்றுக் கொண்டு, எனக்கு அதிலிருந்து ராஜினாமா கொடுத்தார்கள்.
எந்த ஒரு அழுத்தம் காரணமாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இனி கட்சி சார்பாக பேச போகிறேன் என்ற பயம் திமுகவுக்கு உள்ளது என் பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள் மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கும்.அந்த பயத்தில் தான் திமுக பேசி வருகிறார்கள். இனிமேல் தான் விளையாட்டு ஆரம்பிக்க போகிறது." என்று தெரிவித்துள்ளார்.