தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்
தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்
Published on

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்றவர்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.  இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் இருந்து தமிழகம் வந்த குழுவினர் 5 இடங்களை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்கான வரைவு அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து நேற்றைய முன் தினம் மதுரை தோப்பூரில், 1264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

இதனிடையே தமிழக அரசியல் எதிர்கட்சித் தலைவர்கள் அனைத்து வகையிலும் தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்றவர்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக மீது பொய் பரப்புரை செய்பவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com