செய்தியாளார் : மனு
தமிழக அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை கேரளாவுக்கு கடத்திவருகின்றன சில கடத்தல் கும்பல்கள். இக்கும்பலை பிடிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் கடத்தல்கள் தொடர் கதையாகவே இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் மாவட்ட நிர்வாகம் மத்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற துவங்கி உள்ளது.
இதன்படி, விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினசரி பல டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. வரும் நாட்களில் இச்சோதனை அதிகரிக்ககூடும் என்று கூறப்படுகிறது.